Monday, July 13, 2020

பௌமாஸ்வினி


பௌமாஸ்வினி : 14/07/2020

சில நட்சத்திரங்களும் கிழமைகளும் சேரும் போது, அந்த நாட்கள் அமிர்த சித்தி யோக தினங்கள் என்று சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட விசேஷமான புண்ணிய தினங்களில் தேவதைகளை உபாஸிப்பதால் அளவிடமுடியாத பலன் கிடைக்கும்.

आदित्य हस्ते गुरुपुष्ययोगे बुधानुराधा शनिरोहिणी च।
सोमे च सौम्यं भृगुरेवती च भौमास्विनी चामृतसिद्धियोगा:।।

அஸ்வினி நட்சத்திரமும், செவ்வாய் கிழமையும் சேரும் நாள் பௌமாஸ்வினி என்ற புண்ணிய காலம் ஆகும். 
भौमाश्र्विन्यां महादेवी सन्निधौ जप्त्वा महामृत्युं तरति ।
இன்று தேவி பராசக்தியை பூஜை செய்வது, மூல மந்த்ர ஜபம்,துர்கா ஸப்தஸதீ, லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி போன்ற ஸ்தோத்திரங்களின் பாராயணம் செய்வது, நைவேத்யம் முதலியவற்றால் திருப்தி செய்வது ,ம்ருத்யு பயத்தை போக்கி, சந்தோஷ வாழ்க்கையை அடையலாம் என்று தேவி உபநிஷத்தில் உள்ளது .

No comments:

Post a Comment