மாங்கல்ய வரம் தரும் காரடையான் நோன்பு
இந்த ஆண்டு 15-3-2023 புதன்கிழமை விடியற் காலை 5:00 மணிக்கு மேல் 6:00 மணிக்குள் .இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர்.
மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
அம்மனுக்கு கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன், காராமணிப் பயறும் இனிப்பும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நைவேத்தியம் செய்வார்கள்.
உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்
ஒருகாலும் என் கணவன் என்னைப்பிரியாதிருக்க வேண்டும்
நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.
"தோரகம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரிதா பவ ஸர்வதா"
'மாசிக்கயிறு பாசிபடியும்’ காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும் கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment