Wednesday, November 11, 2020

யம தீபம்

யம தீபம்
 12-11-2020 வியாழன் இரவு சூர்ய அஸ்தமனத்திற்கு பின் ஸ்காந்த மஹா புராணத்தில் கூறிய படிகீழ் கண்ட படி செய்ய வேண்டும்.

“कार्तिकस्यासिते पक्षे त्रयोदश्यां निशामुखे।
यम दीपं बहिर्दद्यदपमृत्यु विनश्यति।।"
” கார்திகஸ் யாஸிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் நிசாமுகே யம தீபம் பஹிர் தத்யாத் அப ம்ருத்யுர் விநஸ்யதி”’.

ஆஸ்வின மாதம் க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி திதி நாளுக்கு யம தீப த்ரயோதசி எனப்பெயர்.
அன்று மாலை யம தர்ம ராஜாவைக் குறித்து ,வீட்டுக்கு வெளியில் நல்ல எண்ணைய் விட்டு விளக்குகள் ஏற்றி வைத்தல்
, அறியாமல் செய்த பாபங்களையும் ம்ருத்யு பயத்தையும் போக்கும்.
ஒவ்வொருவரும் அவர்கள் வீட்டில் எவ்வளவு நபர்கள் வஸிக்கிறார்களோ , தலா ஒவ்வொரு மண் விளக்கு வீதம் தன் வீட்டு வாசலிலோ அல்லது பக்கத்தில் உள்ள கோவிலிலோ அவரவர்கள் விளக்கு ஏற்ற வேண்டும்.
“மம சர்வாரிஷ்ட நிவ்ருத்தி பூர்வகம் அபம்ருத்யு நிவாரண த்வாரா யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீப தாநம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொள்ளவும்.
அவரவர்கள் அவரவர் தீபத்திற்கு நமஸ்காரம் செய்யவும். கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்தித்து கொள்ளவும்.
“मृत्युना पाशदण्डाभ्यां कालेन श्यामया सह।
त्रयोदश्यां दीपदानात्सूर्यज: प्रीयतां मम।।"
” ம்ருத்யுநா பாச தண்டாப்யாம் காலேந ச்யாமயா ஸஹ த்ரயோதஸ்யாம் தீப தாநாத் ஸூர்யஜ: ப்ரீயதாம் மம”.
ஸூர்ய புத்ரனான யமன் இந்த த்ரயோதசி தீப தாநத்தால் சந்தோஷ மடையட்டும். என்பது பொருள்.
இது வியாதியற்ற நீண்ட ஆயுளை கொடுக்கும். விபத்து நோய் வராமல் அப ம்ருத்யு தோஷத்தை போக்கடிக்கும்.

கோவத்ஸ த்வாதசி.

12-11-2020 வியாழக்கிழமை
 கோவத்ஸ த்வாதசி.
 कार्तिक कृष्णद्वादशी गोवत्ससंज्ञा
ஐப்பசி மாத க்ருஷ்ண பக்ஷ த்வாதசிக்கு கோவத்ஸ த்வாதசி என்று பெயர்..
இன்று கன்று குட்டியுடன் கூடிய பசுவை பூஜை செய்ய வேன்டும்.
பசுமாடு, கன்றுக்குட்டி இரண்டையும் குளிப்பாட்ட வேண்டும். சந்தனம், குங்குமத்தால் புஷ்பங்களால் அலங்கரிக்கவும் .பூஜை செய்யவும். வைக்கோல் புல், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுக்கவும்.
அர்க்ய மந்த்ரம்
"क्षीरोदार्णवसंभूते सुरासुर नमस्कृते।
सर्वदेवमये मातर्गृहाणार्घ्यं नमो नम:।।"
"க்ஷிரோதார்ணவ ஸம்பூதே
ஸுராஸுர நமஸ்க்ருதே
ஸர்வதேவ மயேமாத:
க்ருஹாணார்க்யம் நமோ நம:"

இன்று மாத்ரம் கன்றுக்குட்டியை முழுவதும் பால் குடிக்க விட்டு விடவும். பால் கறக்க வேண்டாம். நிர்ணய சிந்து
"गोक्षीरं गोघृतं चैव दधिि तक्रं च वर्जयेत्।"
 “கோக்ஷீரம், கோக்ருதம் சைவ ததி தக்ரம் ச வர்ஜயேத்”
 என்று சொல்கிறது.
இன்று மட்டும் பசுவின்- பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் சாப்பிட வேண்டாம் என்கிறது. பசு மாட்டின் கழுத்து பகுதியை சொறிந்து கொடுக்கலாம்.
கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி பசு மாட்டிற்கு சாப்பிட புல் தர வேண்டும்.

”सुरभि त्वं जगन्मातर्देवि विष्णुपदे स्थिता। 
सर्वदेवमये ग्रासं मयादत्तमिमं ग्रस।।"
 “ஸுரபி த்வம் ஜகன்மாதர் தேவி விஷ்ணுபதே ஸ்திதா ।
 ஸர்வ தேவ மயே க்ராஸம் மயா தத்தம் இமம் க்ரஸ।।”
 
கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி பசுவை வேண்டி கொள்ள வேண்டும்.

"सर्वदेवमये देवि सर्वदेवैरलंकृते।
मातर्ममाभिलषितं सफलं कुरु नन्दिनि ।।"
“ஸர்வதேவ மயே தேவி ஸர்வ தேவைரலங்க்ருதா
மாதர் மமா அபிலஷிதம் ஸபலம் குரு நந்தினி.”

இதனால் குடும்பத்தில் அழியாச்செல்வமும் மங்களமும் உண்டாகும்.