Tuesday, July 18, 2023

புருஷோத்தம மாத வ்ரதம்

मलमास व्रतं
18-07-23 முதல் 16-08-23 வரை அதிக மாசம்
व्रतचूडमणि
मल मासे पुरुषोत्ततम संञम्
புருஷோக்தம மாசம்

 மலமாசம் அதிகமாசம் என்ற புருஷோக்தம மாசம்.
சுமார் 32 மாசத்துக்கு ஒரு முறை நிகழும். ஒரு அமாவாசைக்கும் இன்னோரு அமாவாசைக்கும் நடுவில் சூரிய சங்க்ரமணம் என்ற தமிழ் மாதப்பிறப்பு ஏற்படலனா அது அதிகமாசம்னு பேர்
नारायणमभ्यर्चय ब्राह्मणान् भोजयेतित्युक्तं
நான் எனது எல்லா தெய்வீக குணங்களையும் இந்த மாதத்திற்கு அளிக்கிறேன், எனது பெயரை கொண்டு இந்த மாதம் புருஷோத்தம மாதமென்று இந்த உலகில் புகழப்படும்.
उपवासेन नक्तेन चैकभुक्तेन वा न्रुप
एकस्यनियमं कृत्वा दानम्दद्याद्दिनेदिने
இந்த மாதத்தில் என் ஆசிர்வாதம் பூரண சக்தியோடு  இதை அனுஷ்டிக்கிற பக்தனுக்கு உண்டு  என்கிறார் ஸ்ரீ  கிருஷ்ணன்.    விரதமிருப்பவனின்  சகல பாபங்களும் தீரும். பரிசுத்த பக்திக்கு  இந்த மாதத்தில்  அனுஷ்டிக்கும்  விரதமே மூலம்.   வேதத்தில் சொன்ன சத் காரியங்களின்  பலனை விட  புருஷோத்தம மாத அனுஷ்டானம் மேன்மையானது
दानम्कुर्यातपुपानां दक्षिणाघृतसंयुतम्
त्रयत्रिम्सदपूपांच प्रदद्याद्घृत संयुतान्
 ஒரு வேளை  ஆகாரம்.  மத்யானமோ  சூர்யாஸ்தமனத்துக்கு பிறகோ.    பால்  பழங்கள்,

இந்த பரம பவித்ரமான புருஷோக்தம மாசத்தில சூர்ய உதயத்துக்கு முன்ன எழுந்து ஸ்னாநம் பண்ணி அர்க்யம் விடனும்
சுத்த ஜலத்தை கையில் எடுத்து கொண்டு சூர்ய பகவானுக்கு அர்க்யம் தர வேண்டும். தினசரி அல்லது துவாதசி முதல் 4 நாட்கள் அல்லது அதிக மாச கடைசி நாள் அன்றாவது வெண்கல பாத்திரத்தில் 33 வெல்ல அப்பங்களை வைத்து கொண்டு, ,தக்ஷிணை வைத்து கொண்டு யாராவது ஒரு பிராமணர்க்கு அபூப தானம் செய்ய வேண்டும்
पद्मपुराणे
ஸ்லோகம்
"त्रयत्रिम्सदपूपांच शर्कराघृतसयुतान्
सदक्षिणानहंतुभ्यं काम्सयपात्रे निघाय च
दास्ये जनार्दनप्रीत्यै गृहाणत्वं द्विजोत्तम
मलमासस्तु मासानां मलिन: पीपसंभव:
तत्पाप निवृत्यर्थं वायन् प्रददांयहम्
पुरुषोत्तम  प्रीत्यर्थं त्रयस्त्रिम्शत संख्याकापूप वायन दानं सकांस्यपात्रं तुभ्यं संप्रददे"

விஷ்ணு ரூபே ஸஹஸ்ராம்ஸு: ஸர்வ பாப ப்ரணாஸந:
அபூபான்ந ப்ரதானேந 
மம பாபம் வ்யபோஹது

நாராயண ஜகத் ப்ரிதா
பாஸ்கர ப்ரதிரூபகா:
வ்ரதேநானேந புத்ராம்ச
ஸம்பதன்ச அபிவர்தயே

அதிக மாஸ அர்க்ய ஸ்லோகம்

தேவதேவ மஹாதேவ ப்ரலயோத்பத்தி காரக:
க்ருஹாணார்க்யம் மயா தத்தம்
க்ருபாம்க்ருபாமமோபரி
சூர்ய நாராயணாய நம: இதமர்க்யம் (3)
புராண புருஷேஷான 
ஸர்வ லோக நிக்ருந்தந
அதிமாஸ வரப்ரீத:
க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே
புருஷோத்தமாய நம: இதமர்க்யம் (3)
ஸ்வயம்புவே நமஸ்துப்யம்
ப்ரம்மணே அமிததேஜஸே
நமோஸ்துதே ஸ்ரீயாநந்த
தயாம்குரு மமோபரி
ப்ரம்மணே நம: இதமர்க்யம் (3)
யஸ்ய ஹஸ்தே கதா சக்ரே
கருடோ யஸ்ய வாஹனம்
சங்கம் கரதலே யஸ்ய
ஸமேவிஷ்ணு ப்ரஸிதது
விஷ்ணவே நம: இதமர்க்யம் (3)
கலா காஷ்டாதி ருபேண
நிமேஷகடிகா தினம்
யோவஞ்ஜகதி பூதானி
தஸ்மை காலாத்மனே நம:
காலாத்மனே நம: இதமர்க்யம் (3)
குருக்ஷேத்ர மயோ தேச
காலபர்வ த்விஜோஹரி
ப்ரதிவீ ஸமம் இமம் தானம்
க்ருஹாண புருஷோத்தம
புருஷோத்தமாய நம: இதமர்க்யம் (3)
மலாநாஞ்ச விஷுத்யர்த்தம்
பாப ப்ரஸமனாயச
புத்ரபௌத்ராபிவ்ருத்யர்த்தம்
தவ தாஸ்யாமி பாஸ்கர
பாஸ்கராய நம: இதமர்க்யம் (3)

Monday, March 13, 2023

காரடையான் நோன்பு 2023

மாங்கல்ய வரம் தரும் காரடையான் நோன்பு

  இந்த ஆண்டு 15-3-2023 புதன்கிழமை விடியற் காலை 5:00 மணிக்கு  மேல் 6:00 மணிக்குள் .
இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர்.
மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

அம்மனுக்கு கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன், காராமணிப் பயறும் இனிப்பும் கலந்து  செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நைவேத்தியம் செய்வார்கள்.

உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்
ஒருகாலும் என் கணவன் என்னைப்பிரியாதிருக்க வேண்டும்

நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.
"தோரகம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரிதா பவ ஸர்வதா"
'மாசிக்கயிறு பாசிபடியும்’ காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும் கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.