Sunday, July 19, 2020

ஆடி அமாவாசை.

20-07-20. திங்கள் ஆடி அமாவாசை.

 ஶார்வரி  நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே க்ரீஷ்ம  ருதெள கடக   மாசே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள இந்து வாஸரயுக்தாயாம்  புனர்வஸு  நக்ஷத்ரயுக்தாயாம் ஹர்ஷண நாம யோக சதுஷ்பாத கரணஏவங்குண ஸகல விசேஷன விஷிஷ்டாயாம் அஸ்யாம் 

  அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ( ப்ராசீணாவீதி ) ------- அக்ஷய த்ருப்தியர்த்தம்  அமாவாஸ்யா புண்ய கால  தர்ச சிராத்த தில தர்ப்பணம்  அத்ய கரிஷ்யே.

Thursday, July 16, 2020

காமிகா ஏகாதசி

காமிகா ஏகாதசி*

தனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்ய சொர்ணம் வீட்டில் தங்கும் (தங்கம் நம் வீட்டில் தங்கும்). வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று ஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மன பயம் அகலும், மரண பயம் அகலும், கொடிய துன்பம் விலகும்.

Monday, July 13, 2020

பௌமாஸ்வினி


பௌமாஸ்வினி : 14/07/2020

சில நட்சத்திரங்களும் கிழமைகளும் சேரும் போது, அந்த நாட்கள் அமிர்த சித்தி யோக தினங்கள் என்று சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட விசேஷமான புண்ணிய தினங்களில் தேவதைகளை உபாஸிப்பதால் அளவிடமுடியாத பலன் கிடைக்கும்.

आदित्य हस्ते गुरुपुष्ययोगे बुधानुराधा शनिरोहिणी च।
सोमे च सौम्यं भृगुरेवती च भौमास्विनी चामृतसिद्धियोगा:।।

அஸ்வினி நட்சத்திரமும், செவ்வாய் கிழமையும் சேரும் நாள் பௌமாஸ்வினி என்ற புண்ணிய காலம் ஆகும். 
भौमाश्र्विन्यां महादेवी सन्निधौ जप्त्वा महामृत्युं तरति ।
இன்று தேவி பராசக்தியை பூஜை செய்வது, மூல மந்த்ர ஜபம்,துர்கா ஸப்தஸதீ, லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி போன்ற ஸ்தோத்திரங்களின் பாராயணம் செய்வது, நைவேத்யம் முதலியவற்றால் திருப்தி செய்வது ,ம்ருத்யு பயத்தை போக்கி, சந்தோஷ வாழ்க்கையை அடையலாம் என்று தேவி உபநிஷத்தில் உள்ளது .

ரிக் யஜுர் உபாகர்மா

யஜுர் உபாகர்மா
(03-08-2020) திங்கட்கிழமை
ரிக் உபாகர்மா
(04-08-2020) செவ்வாய்கிழமை
இந்த வருஷம்
கோவிலுக்குச் செல்ல முடியாததாலும்
வாத்தியாரை நேரில் அணுகி உபாகர்மா செய்ய முடியாதவர்களும் (google meet) உதவியுடன் onlineல்
உபாகர்மா செய்து கொள்ள அவசியம் பதிவு செய்து கொள்ளவும். 22ம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு பூணுல், பவித்ரம், தர்பை முதலியவை அனுப்பி வைக்க முடியும்.
பூணுல், பவித்ரம், தர்பை அனுப்ப ரூபாய் 100 
உபாகர்மா  சம்பாவனை
தனி நபர் ரூபாய் 100
குடும்பதிற்கு ரூபாய் 300

நேரம் மற்றும் google meet link
E -mail மூலம் அனுப்பி வைக்கபடும்

பணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்

Payment
UPI ID -  ravisastrigal@icici
Google pay - ravisastrigal@ok icici
K. Swaminathan
(Ravi sastrigal)
ICICI BANK
A/c no: 603701519267 
BRANCH- SELAIYUR
IFSC Code ICIC0006037 (used for RTGS and NEFT transactions)
After payment register here
Registration form

Sunday, June 28, 2020

நிர்ஜல ஏகாதசி.

நிர்ஜல ஏகாதசி. 
(2-6-2020)
"ज्येष्ठ शुक्लैतादशी निर्जला"
ஜேஷ்ட மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரக்கூடிய  ஏகாதசி விரதத்தை, உண்ணாமல் மட்டும் அல்ல, ஒரு துளி நீர் கூட அருந்தாமல் இருந்து கடைபிடிக்க வேண்டும்.
('நீர் கூட அருந்தாமல்' என்று பொருள் படுவதால் இது "நிர்-ஜல" ஏகாதசி என்று ஆயிற்று...) இந்த விரத நேரமானது ஏகாதசி அன்று காலை சூர்ய உதயம் முதல் மறுநாள் 'துவாதசி' காலை சூர்ய உதயம் வரை ஆகும். 
"तत्र निर्लमुपोष्य विप्रेभ्यो जलकुम्भान्दद्यादिति"
பின்னர், துவாதசி அன்று காலை ஸ்நானம் செய்த பின்னர்  பகவான் விஷ்ணுவை பிரார்த்தனை செய்துவிட்டு, அந்தணருக்கு ஹிரண்யம் அல்லது வேறு வஸ்திரம் தானம் செய்துவிட்டு (அல்லது அவரவர்க்கு முடிந்த வரையில் ஏதாவது ஒரு குடை, செருப்பு, கைத்தடி அல்லது முடிந்த  அளவு தனம் தானம் செய்துவிட்டு) அதன்பின்பு கண்டிப்பாக அவருக்கு நீர் அருந்தக் கொடுத்து அதன் பின்னர் அவருக்கும் உணவளித்து, தானும் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் 
 
स्कान्दे

"निर्जल समुपोष्यात्र जलकुम्भान्सशर्करान्
प्रदाय विप्रमुख्येभ्यो मोदते विष्णुसन्निधौ"
நிர்ஜல ஏகாதசியின் பலன்கள் 

 இப்படி நீர் கூட அருந்தாமல் மிகக்கடுமையாக இந்த விரதத்தை கடைபிடித்தால், அவர்களது மலையளவு பாவமும் குறையும். பல்வேறு புண்ய நதிகளில் நீராடிய பலனைப்பெறுவர். மேலும், பிரதி மாதம் சுக்ல பட்ச, கிருஷ்ண பட்ச ஏகாதசி விரதம் இல்லாமல் இருந்தாலும், அதற்கு விரதம் இருந்த பலனையும் சேர்த்து பெறுவர். 
இந்த நிர்ஜல ஏகாதசி விரதத்தை கடைப் பிடித்தவர்களுக்கு, தனம், தான்யம், மற்ற அனைத்து செல்வங்களும் தானாக வந்து சேரும். மேலும், அவர்களது இறப்பிற்குப் பின், அவர்களை கூட்டிச்செல்ல யமதூதர்கள் வர மாட்டார்கள், மாறாக விஷ்ணு தூதர்கள் தான் வருவார்கள். அந்த ஆன்மா, விஷ்ணு பாதத்தை அடையும்.